உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிரிக்கெட் சூதாட்டம்: 23 பேர் கைது; ரூ.13 கோடி பறிமுதல் 

 கிரிக்கெட் சூதாட்டம்: 23 பேர் கைது; ரூ.13 கோடி பறிமுதல் 

பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாடிய, 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 13 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு சி.சி.பி., போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஐ.பி.எல்., கிரிக்கெட்டை மையமாக வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக, சி.சி.பி., உட்பட பெங்களூரு நகரின் பல போலீஸ் நிலையங்களில், 17 வழக்குகள் பதிவாகின. இதில் 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து, 13 கோடியே 37 லட்சத்து 36,911 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகிறோம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை