கிரைம் கார்னர்
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத். இவர் சில வாரங்களுக்கு முன் முகநுாலில் துபாயை சேர்ந்த ஒருவரிடம் பேசினார். அப்போது, அந்நபர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என கூறினார். இதை நம்பிய மஞ்சுநாத்தும் 4.50 லட்சம் ரூபாயை அந்நபருக்கு அனுப்பினார். ஆனால், அந்நபரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மஞ்சுநாத், விதான் சவுதா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.பெங்களூரு, ஒயீட்பீல்ட் தொம்மசந்திரா சாலையில் நேற்று பிற்பகல் தண்ணீர் லாரி குஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, தண்ணீர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் லாரி கவிழ்ந்தது. இதில், மாரத்தஹள்ளியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மல்லிநாத் படுகாயம் அடைந்தார். இந்த லாரி கவிழ்ந்த வீடியோ, முன்னால் சென்று கொண்டிருந்த காரின் கேமராவில் பதிவானது.பெங்களூரு, கெங்கேரி புறநகர் பகுதியில் உள்ள ஷிர்கே சதுக்கம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்காக நேற்று முன்தினம் லாரி டிரைவர் சோட்கா, கற்களை லாரியில் இருந்து இறக்கி கொண்டிருந்தார். அப்போது, லாரியை பின்னோக்கி கொண்டு செல்லும் போது, மின் கம்பியில் மோதியது. லாரியில் மின்சாரம் பாயந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.துமகூரு, குனிகல் தாலுகா, நாகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா, 63. இவர் தனது நிலத்தில் நேற்று டிராக்டர் மூலம் விவசாயம் செய்து கொண்டிருந்தார். அப்போது, டிராக்டர் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி, கவிழ்ந்தது. டிராக்டருக்கு அடியில் சிக்கிய ராமகிருஷ்ணா உயிரிழந்தார். துமகூரு, நிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் ராவ், 35. இவர் குப்பி தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் வீட்டின் முன் உள்ள தெரு விளக்குகளை அணைக்க சுவிட்சை ஆப் செய்து உள்ளார். அப்போது, இவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு வயதில் பெண் குழந்தையும், ஒரு மாத கைக்குழந்தையும் உள்ளது. அலட்சியமாக செயல்பட்ட பெஸ்காம் ஊழியர்கள் மீது அப்பகுதியினர் கோபத்தில் உள்ளனர்.