உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.7.50 லட்சம் சைபர் மோசடி

தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.7.50 லட்சம் சைபர் மோசடி

ஒயிட்பீல்டு: பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் அபிஷேக் மித்ரா. இவரது, 'வாட்ஸாப்' எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன், யாரோ ஒருவரிடமிருந்து மெசேஜ் வந்து உள்ளது. அந்த நபர் தன்னை அபிஷக் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். அவர், தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், தனக்கு உடனடியாக பணம் தேவை எனவும் கேட்டு உள்ளார். இதையடுத்து, அவர் கூறியது போன்று பணத்தை அபிஷேக் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பினார். மொத்தம் 7.50 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பினார். இதையடுத்து, அந்நபரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. இது குறித்து, அபிஷேக் தன் நண்பர்களிடம் கூறினார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து, சைபர் போலீசாரிடம் கடந்த 19ம் தேதி புகார் செய்தார். போலீசார் கூறுகையில், 'சைபர் திருடர்களின் வங்கி விபரங்கள் குறித்து விசாரிக்கிறோம். இது ஒரு ஆள் மாறாட்ட மோசடியாக இருக்கலாம் என சந்தேகம் இருக்கிறது. பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது பல முறை சரிபார்த்து கொள்வது நல்லது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ