உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரை அழகாக்கிய டபூபியா பூக்கள்

 பெங்களூரை அழகாக்கிய டபூபியா பூக்கள்

பெங்களூரு : பெங்களூரின் பல்வேறு இடங்களில், மலர்ந்துள்ள டபூபியா பூக்கள் நகரின் அழகை அதிகரித்துள்ளது. பலரும் இதை போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். கடந்த 1980ல், பெங்களூரில் மக்கள் தொகை ஏறுமுகமானது. புதிய லே - அவுட்டுகள் அமைந்தன. சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. மேம்பாலங்கள் கட்டும் போது, நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. வனத்துறை அதிகாரிகள் விதவிதமான செடிகள் நட்டும், அவற்றை சரியாக பராமரிக்காததால், உலர்ந்து பாழாகின. இதே வேளையில் சேதுராம் கோபால்ராவ் நேகினஹாளா, வனத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மண்ணுக்கு தகுந்தபடி செடிகள் நட முடிவு செய்தார். டபூபியா ரோசியா, மூங்கில் உட்பட, பல செடிகளை நட்டதுடன், பராமரிப்பதிலும் ஆர்வம் காட்டினார். அதன்பின் அடுத்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு சாலைகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகள் என, பல இடங்களில், 15 லட்சம் டபூபியா பூச்செடிகளை நட்டார். அவர் நட்ட பூச்செடிகள், இன்று நகரை அழகாக்கியுள்ளன. கோடைக்காலத்தில் அதிகமாக பூக்கும். குளிர்க்காலம் முடிந்ததால், இப்போது பூக்கள் விடத்துவங்கியுள்ளன. பெங்களூரின் கப்பன் பூங்கா, லால்பாக், ஜெயநகர், பசவகுடி, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் என, முக்கியமான இடங்களில் டபூபியா பூக்கள் நகரை அழகாக்கியுள்ளன. இந்த பூக்கள் வெறும் பிங்க் நிறத்தில் மட்டுமின்றி, மஞ்சள், ஊதா நிறங்களிலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ