தர்ஷன் வழக்கு ஆக.,12க்கு ஒத்திவைப்பு
பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணைக்காக, நடிகர் தர்ஷன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை, 57வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 'வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் வந்துவிட்டனரா?' என, வக்கீல்களிடம் நீதிபதி கேட்டார். அதற்கு வக்கீல்கள், 'பவித்ரா கவுடாவை தவிர, மற்றவர்கள் ஆஜராகி உள்ளனர்' என்றனர்.'குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும், அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என கூறி, ஆக., 12ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.