மேலும் செய்திகள்
ஜெய் நரசிம்மா... மே 11,2025 நரசிம்ம ஜெயந்தி
11-May-2025
மைசூரு: பட்டை தலை வாத்துகளை பண்ணை வீட்டில் வளர்த்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமிக்கு டி.நரசிபுரா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் தர்ஷன். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு, மைசூரின் டி.நரசிபுரா அருகே கெம்பய்யனஹுண்டி கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டில் நான்கு பட்டை தலை வாத்துகளை, தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமி சட்டவிரோதமாக வளர்ப்பதாக, 2023ல் வனத்துறைக்கு புகார் சென்றது.பண்ணை வீட்டில் வனத்துறையினர் நடத்திய சோதனையில், பட்டை தலை வாத்துகள் மீட்கப்பட்டன. நண்பர் ஒருவர் பரிசாக கொடுத்தது என்று தர்ஷன் கூறி இருந்தார். ஆனாலும் தர்ஷன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டி.நரசிபுரா நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு வரும் 4 ம் தேதி ஆஜராகும்படி, தர்ஷன், விஜயலட்சுமிக்கு, டி.நரசிபுரா நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பி உள்ளது.
11-May-2025