உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மைசூரு அரண்மனை போன்று பஸ் நிலையம் கட்ட முடிவு

மைசூரு அரண்மனை போன்று பஸ் நிலையம் கட்ட முடிவு

பிடதி,: பிடதியில் மைசூரு அரண்மனை போன்று பஸ் நிலையம், பயணியர் நிழற்குடை கட்ட நகராட்சி முடிவு செய்துள்ளது. பிடதி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நகராட்சி தலைவர் ம.ஜ.த.,வின் ஹரிபிரசாத் தலைமையில் நேற்று நடந்தது.எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் உமேஷ் பேசியதாவது:பிடதியின் பி.ஜி.எஸ்., சதுக்கத்தில், புதிதாக கட்டியுள்ள இந்திரா கேன்டீன் அருகில், பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடத்தில் பஸ் நிலையம், பயணியர் நிழற்குடை கட்டடம் கட்ட வேண்டும். இந்த கட்டடங்கள், மைசூரு அரண்மனை போன்ற வடிவத்தில் இருக்க வேண்டும். மைசூரு மஹாராஜா, மைசூரில் இருந்து பெங்களூரு அரண்மனைக்கு செல்லும்போது, பிடதியில் தங்கி ஓய்வெடுத்த பின், பயணத்தை தொடர்வது வழக்கம்.இப்பகுதியை தன் படையினர், குதிரைகளும் தங்கவும், வண்டிகளை நிறுத்தவும் பயன்படுத்தியதாக, இப்பகுதியில் வசிக்கும் முதியோர் கூறுகின்றனர். மைசூரு மன்னரை நினைவுகூரும் வகையில், அவரது உருவப்படத்துடன் கூடிய வடிவில் அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இவரது ஆலோசனையை அனைத்து கவுன்சிலர்களும், ஏகமனதாக ஒப்புக்கொண்டனர்.அதன்பின் பிடதியில் மைசூரு அரண்மனை போன்ற வடிவில், பஸ் நிலையம், பயணியர் நிழற்குடை கட்டுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை