உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சின்னசாமி மைதானத்திற்கு அனுமதி குறித்து விவாதிக்க முடிவு

சின்னசாமி மைதானத்திற்கு அனுமதி குறித்து விவாதிக்க முடிவு

பெலகாவி: ''சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் போட்டிகளை நடத்த அனுமதி அளிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க புதிய தலைவர் வெங்கடேஷ் பிரசாத், முதல்வர் சித்தராமையாவையும், என்னையும் சந்தித்து, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த அனுமதிக்க அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இம்மைதானத்தில் மீண்டும் போட்டிகளை நடத்த அனுமதி அளிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும். கிரிக்கெட் போட்டியை நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால், கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டும். இது தவிர, ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா கமிட்டி அளித்த பரிந்துரைகளை படிப்படியாக பின்பற்றுவதே எங்கள் யோசனை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை