உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரதமர் வீட்டின் சாலையில் பள்ளம் துணை முதல்வர் கண்டுபிடிப்பு

பிரதமர் வீட்டின் சாலையில் பள்ளம் துணை முதல்வர் கண்டுபிடிப்பு

பெங்களூரு : “டில்லியில் பிரதமர் வீட்டிற்கு செல்லும் சாலையிலும் பள்ளம் உள்ளது; பெங்களூரில் சாலைப் பள்ளங்களை மட்டும் பெரிதுப்படுத்துவது ஏன்?,” என, துணை முதல்வர் சிவகுமார் கேள்வி எழுப்பினார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: பெங்களூரில் உள்ள ஐந்து மாநகராட்சி மண்டலங்களில் தலா 200 பள்ளங்கள் வீதம், தினமும் 1,000 பள்ளங்கள் மூடப்படுகின்றன. மழையை பொருட்படுத்தால் ஜி.பி.ஏ., அதிகாரிகள், ஊழியர்கள் வேலை செய்கின்றனர். டில்லியில் பிரதமர் மோடி வீட்டிற்கு செல்லும் சாலையிலும் பள்ளம் உள்ளது. நாடு முழுதும் சாலைப் பள்ளம் பிரச்னை உள்ளது. ஆனால் பெங்களூரில் உள்ள சாலைப் பள்ளங்களை மட்டும் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. பள்ளங்களை மூட நாங்கள் தொடர்ந்து வேலை செய்கிறோம். பா.ஜ., ஆட்சிக் காலத்தில் சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டு இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை