உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  துணை முதல்வரின் ஆதரவாளர் காங்கிரசிலிருந்து விலகல்

 துணை முதல்வரின் ஆதரவாளர் காங்கிரசிலிருந்து விலகல்

சிக்கமகளூரு: துணை முதல்வர் சிவகுமாரின் தீவிர ஆதரவாளர் மூர்த்தி, காங்கிரசில் இருந்து விலகி உள்ளார். இது, சிக்கமகளூரு மாவட்ட காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் செயலராக இருந்தவர் மூர்த்தி, 57. சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த இவர், துணை முதல்வர் சிவகுமாரின் தீவிர ஆதரவாளர். சிக்கமகளூரு வளர்ச்சி ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், கட்சியின் செயலர் பதவியை நேற்று ராஜினாமா செய்த மூர்த்தி, கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தாலும் வாரிய தலைவர், எம்.எல்.சி., பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், அவர் கட்சியில் இருந்து விலகியதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். பா.ஜ.,வின் கோட்டையான சிக்கமகளூரு தொகுதியில், 25 ஆண்டுகளுக்கு பின், 2023 சட்ட சபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதற்கு மூர்த்தியின் பங்களிப்பும் முக்கிய காரணம். தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள தம்மையா, மூர்த்தி இடையே ஏற்பட்ட உரசலை தீர்த்து வைக்க, கட்சி தலைவர்கள் முயற்சி செய்யவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. தனது ஆதரவாளர் கட்சியில் இருந்து விலகியதால், சிவகுமார் அதிர்ச்சி அடைந்து உள்ளார். மூர்த்தியை தங்கள் பக்கம் இழுக்க, பா.ஜ., முயற்சித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை