உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண் மீது மோத முயன்றாரா? பி.எம்.டி.சி., டிரைவர் சஸ்பெண்ட்

பெண் மீது மோத முயன்றாரா? பி.எம்.டி.சி., டிரைவர் சஸ்பெண்ட்

பெங்களூரு: பெங்களூரு கப்பன் பார்க் பால் பவன் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில், பி.எம்.டி.சி., பஸ்சை மறித்தபடி இளம்பெண் ஒருவர் நிற்பதும், அவர் மீது மோதுவது போல டிரைவர் பஸ்சை ஓட்டியதால், அந்த பெண் நகர்ந்து சென்று உயிர் தப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் கடந்த மாதம் 23ம் தேதி மாலை 5:40 மணிக்கு நடந்து உள்ளது. தன் காருக்கு வழிவிடாமல் இருந்ததால், பி.எம்.டி.சி., பஸ்சை மறித்த ஒரு இளம்பெண், சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் பிரசாந்திடம் வாக்குவாதம் செய்து உள்ளார். இதை பொருட்படுத்தாத டிரைவர், பஸ்சை இயக்கி உள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண் உயிர் தப்பினார். இந்த வீடியோ வேகமாக பரவியது. இதை அறிந்த போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி உத்தரவின்படி, பிரசாந்த் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.சம்பவம் குறித்து பிரசாந்த் நேற்று வெளியிட்ட வீடியோ:ஹட்சன் சதுக்கத்தில், நான் பஸ்சை ஓட்டி சென்று கொண்டிருக்கும் போது, இளம்பெண் ஒருவர் பஸ்சை முந்தி சென்றார். கப்பன் பார்க் போக்குவரத்து சிக்னலில் வைத்து, பஸ்சை வழி மறித்து நின்றார். என்னை நோக்கி உரத்த குரலில் கத்தினார், பஸ்சில் இருந்து கீழே இறங்கும்படி சைகை காண்பித்தார்.சிக்னலில் பின்னால் நின்ற வாகனங்கள் ஹாரன் அடித்ததால், பஸ்சை முன்னோக்கி நகர்த்தினேன். ஆனால், அவர் மீது மோதுவதாக நினைத்து, அதிகாரிகள் என்னை சஸ்பெண்ட் செய்து உள்ளனர். அந்த பெண் மீது மோதும் எண்ணம் எனக்கில்லை.இவ்வாறு வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ