உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயல் தமிழ் சங்கத்தில் தினமலர் பவள விழா கொண்டாட்டம்

தங்கவயல் தமிழ் சங்கத்தில் தினமலர் பவள விழா கொண்டாட்டம்

தங்கவயல்: 'தினமலர்' பவள விழா, தங்கவயல் தமிழ்ச்சங்கத்தில் கொண்டாடப்பட்டது. தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.கலையரசன், 'கேக்' வெட்டினார். நிறுவனர் ராம சுப்பையர் உருவப்படத்துக்கு தாமரை மலர்கள் துாவி வணங்கினர். தமிழ்ச் சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி, துணைத் தலைவர்கள் தீபம் சுப்ரமணியம், திருமுருகன், பொருளாளர் வி.சி.நடராஜன் மலர் துாவி விழாவை துவக்கினர். பத்திரிகையாளர் சங்க முன்னாள் தலைவர் ஸ்ரீதர்பிள்ளை, வக்கீல்கள் சங்க முன்னாள் பொதுச் செயலர் ஜோதிபாசு, நகராட்சி முன்னாள் தலைவர் தயானந்தா, கால்பந்து விளையாட்டு நடுவர் கருணா மூர்த்தி, கோலார் மாவட்ட சாரணர் இயக்க துணை ஆணையர் பிரபு ராம், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் முருகன், பெமல் தமிழ் மன்ற முன்னாள் செயலர் அன்பழகன், முன்னாள் கவுன்சிலர் ராஜா, போட்டோ கலைஞர்கள் சங்கத் தலைவர் குமரேசன், தாஸ், தலித் ரக் ஷனா வேதிகே தலைவர் எஸ்.அன்பரசன், காங்கிரஸ் பிரமுகர்கள் சார்லஸ், அந்தோணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை