உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டொமினோஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு

டொமினோஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு

தார்வாட் : வெஜ் பீட்சாவுக்கு பதிலாக, சிக்கன் பீட்சா அனுப்பிய டொமினோஸ் நிறுவனத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் 50,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.தார்வாட் நகரின் வித்யாகிரியில் வசிப்பவர் பிரத்யும்னா இனாம்தார் என்ற கல்லுாரி மாணவர். நடப்பாண்டு ஜனவரியில் ஆன்லைனில் டொமினோசில், 'வெஜ் பீட்சா' ஆர்டர் செய்தார். இவர் சைவம் என்பதால், தந்துாரி பன்னீர் பீட்சா, பன்னீர் டிக்கா ஆர்டர் செய்திருந்தார். இதற்காக ஆன்லைனில் 555 ரூபாய் செலுத்தினார்.ஆனால் வெஜ் பீட்சாவுக்கு பதிலாக, சிக்கன் பீட்சாவை நிறுவனம் அனுப்பியது. இது குறித்து, மாணவர் டொமினோசில் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அந்நிறுவனத்தினர் பணத்தை திருப்பி தருவதுடன், அவர் ஆர்டர் செய்திருந்த வெஜ் பீட்சாவை, இலவசமாக வழங்குவதாகவும் கூறினர்.இதை ஏற்றுக்கொள்ளாத மாணவர், தனக்கு சிக்கன் பீட்சா அனுப்பி மன வலியை ஏற்படுத்தியதாக, தார்வாட் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு செய்தது போன்று, டொமினோஸ் நிறுவனம், வேறொரு வாடிக்கையாளருக்கு குளறுபடி செய்யக்கூடாது. எனவே, நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கோரினார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், டொமினோஸ் நிறுவனம் தவறு செய்துள்ளதாக கருத்து தெரிவித்து, 50,000 ரூபாய் அபராதம் விதித்தது. பாதிப்படைந்த மாணவரின், வழக்கு செலவுக்காக 10,000 ரூபாய் வழங்கும்படி நேற்று முன் தினம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை