உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஏத்துார் கிராமத்தில் குடிநீர் அதாலத்

 ஏத்துார் கிராமத்தில் குடிநீர் அதாலத்

பேத்தமங்களா: பேத்தமங்களா அருகே உள்ள ஏத்துார் கிராமத்தில், நேற்று, குடிநீர் அதாலத் நடந்தது. கிராம பஞ்சாயத்து அதிகாரி திருமூர்த்தி நாயக் பேசியதாவது: தண்ணீரை உயர்வாக மதிக்க வேண்டும். தண்ணீரை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்னை இருந்தால் கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காண வேண்டும். அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, கிராம பஞ்சாயத்து பகுதியில் உள்ள பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பல முறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டு வருகிறது. தற்போது கிராம பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் பற்றாக்குறை எதுவும் இல்லை. ஏதேனும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், விரைவில் தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் பேசினார். கிராம பஞ்சாயத்து திட்ட அதிகாரி கோதண்டராம், சசிதர், ஏத்துார் சந்திரசேகர், சீனிவாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை