உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வாகன ஓட்டிகளே... உஷாரய்யா உஷாரு…! மீண்டும் வாகன டோயிங் துவக்கம்

 வாகன ஓட்டிகளே... உஷாரய்யா உஷாரு…! மீண்டும் வாகன டோயிங் துவக்கம்

பெங்களூரு: தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தினால், டோயிங் செய்வது பெங்களூரில் மீண்டும் துவங்கி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் உஷாராக இருக்க வேண்டும். பெங்களூரில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில், வாகனங்களை நிறுத்தினால் டோயிங் செய்யும் வேலையை, சில தனியார் நிறுவனங்கள் செய்தன. கடந்த, 2020 ம் ஆண்டு தன் பைக்கை டோயிங் செய்து சென்ற வாகனத்தில் தொங்கியபடி, வாலிபர் ஒருவர் சென்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர். இதனால், டோயிங் முறை நிறுத்தப்பட்டது. இதன்பின், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை தடை செய்யப்பட்ட இடத்தில் விட ஆரம்பித்தனர். இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பெங்களூரில் மீண்டும் டோயிங் முறை துவங்கப்படும் என்று, துணை முதல்வர் சிவகுமார் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று முன்தினம் முதல் வாகன டோயிங் மீண்டும் துவங்கி உள்ளது. தனியார் நிறுவன வாகனங்களுக்கு பதிலாக, அரசே சொந்தமான டோயிங் வாகனங்கள் வாங்கி உள்ளது. அந்த வாகனத்தில் டிரைவரும், இரண்டு போக்குவரத்து போலீசாரும் இருப்பர். டோயிங் செய்து எடுத்து செல்வது பைக்காக இருந்தால், 650 ரூபாயும்; காராக இருந்தால் 1,000 ரூபாயும் அபராதம் செலுத்தி எடுத்து வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை