மேலும் செய்திகள்
ஒட்டுண்ணி வளர்க்க நாளை பயிற்சி
20-Jan-2026
மைசூரு: மைசூரு ஸ்ரீசாமராஜேந்திர உடையார் உயிரியல் பூங்காவில், மூத்த ஒட்டகச்சிவிங்கியாக கருதப்பட்டு வந்த 'யுவராஜா', வயது முதிர்வு காரணமாக நேற்று காலை 10:30 மணியளவில் உயிரிழந்தது. கடந்த1987ல் ஜெர்மனியில் இருந்து 'ஹென்றி' - ஹனி ஒட்டகச்சிவிங்கி மைசூருக்கு கொண்டு வரப்பட்டது. இவற்றுக்கு, 2001 டிசம்பர் 7ல் 'யுவராஜா' என்ற ஒட்டகச்சிவிங்கி பிறந்தது. அன்று முதல் மிருகக்காட்சி சாலையில் வளர்ந்து வந்தது. கடந்த 2025 டிசம்பர் 7ல், யுவராஜாவுக்கு 25ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை, மிருகக்காட்சிசாலை அதிகாரிகள், ஊழியர்கள் விமர்சையாக கொண்டாடினர். மிருகக்காட்சி சாலையில் மொத்தம் 10 ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளன. வனப்பகுதியில் வளரும் ஒட்டகச்சிவிங்கிகள், 10 முதல் 15 ஆண்டுகள் உயிர் வாழும். ஆனால் மிருகக்காட்சிசாலையில் வளர்க்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கி 25 ஆண்டுகள் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
20-Jan-2026