யானை தாக்கி முதியவர் பலி
குடகு, : குடகு மாவட்டத்தில், காட்டு யானை தாக்கியதில் முதியவர்பலியானார்.குடகு மாவட்டம், விராஜ் பேட் தாலுகா வின், கரடி கோடு கிராமத்தில் வசித்தவர்சின்னப்பா, 70. இவர் நேற்று முன் தினம் நள்ளிரவு, கழிப்பிடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த காட்டு யானை, முதியவரை தும்பிக்கையால் தாக்கிக் கொன்றது.நேற்று காலை அவ்வழியாக சென்ற சிலர், முதியவர் இறந்துகிடப்பதை கண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், முதியவரின் உடலை மீட்டனர்.தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வைஇட்டனர்.விராஜ்பேட் தாலுகாவின், பாலிபெட்டா எஸ்டேட்டில், இரண்டு நாட்களுக்கு முன்பு, காபி தோட்ட மேற்பார்வையாளர் செல்லா, 65,என்பவரை காட்டுயானை தாக்கிக் கொன்றது.இரண்டு நாட்களில் இருவர் காட்டு யானைக்கு பலியானதால், கிராமத்தினர் கொதிப்படைந்துள்ளனர்.விராஜ்பேட் சுற்றுப்பகுதி கிராமங்கள், காட்டு யானைகளின் தொல்லையால் அவதிப்படுகின்றன. தினமும் யானை பயத்துடன் கிராம மக்கள்நடமாடுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும்படி கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.