உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இரண்டு தொழிலாளர்களை கொன்ற யானை உயிரிழப்பு

இரண்டு தொழிலாளர்களை கொன்ற யானை உயிரிழப்பு

ஷிவமொக்கா: இருவரை தாக்கி கொன்ற காட்டு யானை, சக்ரேபைலு முகாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. சிக்கமகளூரு மாவட்டத்தின், பாளஹொன்னுாரு அருகில், காரஞ்சிபுரா பகுதியில் நாகேஷ் கவுடா என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளி எல்லப்பா என்பவர், கடந்த பிப்ரவரியில் காட்டு யானை தாக்குதலில் பலியானார். இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்தில், இதே காபி தோட்டத்தில் பணிக்கு சென்ற, போரம்மா, 34, என்ற பெண்ணையும் யானை மிதித்து கொன்றது. இரண்டு தொழிலாளிகளை பலி வாங்கிய காட்டு யானையை பிடிக்க, வனத்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஏழு வளர்ப்பு யானைகள், 75 ஊழியர்கள் கடுமையாக போராடி, யானையை பிடித்து ஷிவமொக்காவின், சக்ரேபைலு யானைகள் முகாமுக்கு கொண்டு வந்தனர். இந்த யானைக்கு, 'சவுர்யா' என, பெயர் சூட்டி பயிற்சி அளிக்க துவங்கினர். யானையை பிடிக்கும் போது, தொடையின் உட்புறம் காயமடைந்தது. இதை கவனிக்காமல் விட்டதால் காயம் பரவியது. பயிற்சியின் போதும் யானையின் கால், உடலின் பல பகுதிகளில் காயமடைந்தன. நேற்று முன்தினம் மாலை கீழே விழுந்தது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி, நேற்று காலை யானை இறந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ