உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வேலையில் இருந்து நீக்கியதால் மேலாளரை கொன்ற ஊழியர் கைது

 வேலையில் இருந்து நீக்கியதால் மேலாளரை கொன்ற ஊழியர் கைது

ராஜகோபால்நகர்: சரியாக வேலைக்கு வராததால், வேலையில் இருந்து நீக்கிய மேலாளரை, கத்தியால் குத்திக்கொன்ற ஊழியர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேச மாநிலத்தின் ராகுல், 38. பெங்களூரு திகளரபாளையாவில் உள்ள பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்தார். இந்நிறுவனத்தில் யாத்கிரையை சேர்ந்த ஹனுமந்தப்பா, 33, என்பவரும் வேலை பார்த்தார். கடந்த, 20 நாட்களாக ஹனுமந்தப்பா சரியாக வேலைக்கு வரவில்லை. நேற்று முன்தினம் காலை வேலைக்கு வந்த அவரிடம், 'ஏன் சரியாக வருவது இல்லை' என்று, ராகுல் கேள்வி எழுப்பினார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த ஹனுமந்தப்பா வேலையை விடுவதாக கூறினார். இனி நீ வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி ஹனுமந்தப்பாவை ராகுல் வெளியே அனுப்பினார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, நிறுவனத்திற்கு தேவையான பொருட்கள் லாரியில் வந்தன. பொருட்களை ராகுலும், சக ஊழியர்களும் இறக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஹனுமந்தப்பா, ராகுலை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை, சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டார். யாத்கிர் தப்பி செல்ல முயன்ற ஹனுமந்தப்பாவை, ராஜகோபால்நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை