உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முதல்வர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

 முதல்வர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

சித்தராமையாவும், சிவகுமாரும் சிற்றுண்டி சாப்பிட்டுள்ளனர். அப்போதே முதல்வர் பதவி தொடர்பான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. எங்கள் மீது நம்பிக்கை அளித்து வாக்களித்த மாநில மக்கள் எதிர்பார்த்தபடி மாநிலம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.,க்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தேர்தலின் போது அளித்த ஐந்து வாக்குறுதி களையும் நிறைவேற்றி உள்ளது. பெலகாவி கூட்டத்தொடரின் போது, வட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விவாதம் நடக்கும். அமலாக்க துறையை தவறாக பயன்படுத்தி, நேஷனல் ஹெரால்டு வழக்கில், 2,000 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. - தேஷ்பாண்டே, காங்., - எம்.எல்.ஏ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ