உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இளம்பெண்ணிடம் சில்மிஷம் பொறியியல் பட்டதாரி கைது

இளம்பெண்ணிடம் சில்மிஷம் பொறியியல் பட்டதாரி கைது

ஜக்கூர்: ஜக்கூரில் அடிபட்ட நாயை காப்பாற்றச் சென்ற இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு ஜக்கூரில் கடந்த 7ம் தேதி இரவு நேர்ந்த விபத்தில் காயமடைந்த நாயை, அவ்வழியாக காரில் வந்த இளம்பெண் காப்பாற்றி முதலுதவி செய்து கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், இளம்பெண்ணின் உடலை தொட்டு சில்மிஷம் செய்தார். அதிர்ச்சியடைந்த இளம்பெண், கூச்சலிட்டார்; அதற்குள் அந்நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். சாலை ஓரத்தில் இருந்த பெட்ரோல் பங்க்கில், கைகளை இளம்பெண் கழுவிக் கொண்டிருந்தார். அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அதே வாலிபர், மீண்டும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதை பார்த்த அவரது தோழியர், அந்த வாலிபரை பிடிக்க ஓடினர். அவர்கள் வருவதை பார்த்த அவர், பைக்கில் வேகமாக சென்றபோது இடறி கீழே விழுந்தார். அவரை பிடித்து, அம்ருதஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், வாலிபரிடம் விசாரித்தனர். அவர், மஞ்சுநாத் என்றும், பொறியியல் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !