உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  யானை தாக்கி எஸ்டேட் காவலாளி பலி

 யானை தாக்கி எஸ்டேட் காவலாளி பலி

குடகு: எஸ்டேட்டில் ரோந்து சென்று கொண்டிருந்த, பாதுகாப்பு ஊழியரை காட்டு யானை தாக்கி கொன்றது. குடகின் சித்தாபுரா அருகில் உள்ள படகா - பனங்காலா கிராமத்தில் எஸ்டேட் உள்ளது. இதில் ஹுன்ட்லி கிராமத்தை சேர்ந்த அப்துல் லத்தீப், 72, பாதுகாப்பு ஊழியராக பணியாற்றினார். நேற்று மதியம் உணவை முடித்து கொண்ட இவர், எஸ்டேட்டில் ரோந்து சுற்றுவதில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிரே வந்த காட்டு யானை, அவரை தாக்கி கீழே தள்ளி மிதித்தது. அவருடன் இருந்த மற்றொரு ஊழியரையும் தாக்கியது. அவர் லேசான காயமடைந்தார். எஸ்டேட்டில் இருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடியதால், யானையிடம் இருந்து உயிர் தப்பினார். யானை வனத்துக்குள் சென்று மறைந்த பின், காயமடைந்திருந்த அப்துல் லத்தீபை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு விராஜ்பேட் எம்.எல்.ஏ., பொன்னண்ணா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை