புத்த மதத்திற்கு மாறினாலும் எஸ்.சி., சான்றிதழ் வழங்கணும்
பெங்களூரு : 'புத்த மதத்திற்கு மாறினாலும் எஸ்.சி., ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்' என, சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டு உள்ள உத்தரவு: எஸ்.சி., சமூகத்தின் உட்பிரிவில் உள்ள 101 துணை ஜாதி மக்கள், புத்த மதத்திற்கு மாறினாலும், அவர்களுக்கு எஸ்.சி., என்றே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். சான்றிதழில் உள்ள மதம் தொடர்பான பத்தியில் புத்த மதம் என்று குறிப்பிடுவதை அனுமதிக்க வேண்டும். மாணவர்கள், பெற்றோர் விரும்பினால் அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் எழுத்தறிவு துறைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் கூட, மத பத்தியில் புத்த மதம் என்று குறிப்பிட அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.