| ADDED : நவ 18, 2025 04:49 AM
பல்லாரி: குடும்ப பிரச்னையால் சண்டை போட்டுக் கொண்ட இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். பல்லாரி மாவட்டம், சிரகுப்பா தாலுகாவின், மன்னுார் சூகுரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பெத்தராஜு கேம்ப் கிராமத்தில் வசித்தவர் அமரேஷ், 24. ஓராண்டுக்கு முன்பு, இவருக்கு ஸ்ருதி, 20, என்பவருடன் திருமணம் நடந்தது. இன்னும் குழந்தை இல்லை. சில நாட்களாக குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதி அவ்வப்போது சண்டை போட்டுக் கொண்டனர். பெற்றோர் அறிவுரை கூறியும் பயன் இல்லை. நேற்று காலை குடும்பத்தினர் வயலுக்கு சென்றிருந்தனர். தனியாக இருந்த தம்பதிக்கு இடையே, ஏதோ காரணத்தால் மீண்டும் வாக்குவாதம் நடந்தது. மனம் நொந்த தம்பதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். வயலில் இருந்து குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தபோது, இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்து வந்த சிரிகேரி போலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.