உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

மங்களூரு: பெற்ற மகளை, மூன்று ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் 53 வயது நபர் வசிக்கிறார். இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார். இந்த இளம்பெண், 17 வயதாக இருந்தபோது, தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்டார். தாய் வீட்டில் இல்லாத நேரத்தில், மகளை தந்தை பலாத்காரம் செய்தார்.இந்த விஷயத்தை யாரிடமும் கூற முடியாமல், இளம்பெண் தவித்தார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இம்மாதம் 21ம் தேதியன்று, தாய் பணிக்கு சென்ற பின், மகளை தந்தை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.அதே வேதனையில் பணிக்குச் சென்ற அவர், இருக்கையில் அமர்ந்து, தந்தையின் செயலை நினைத்து அழுது கொண்டிருந்தார். இதை கவனித்த நிறுவன உரிமையாளர், என்ன நடந்தது என கேட்ட போது, நடந்ததை கூறினார். இந்த விஷயத்தை அவர், மங்களூரு நகர் போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.இதையடுத்து நேற்று முன்தினம், பெண்ணின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை இளம்பெண் கூறினார். அவரிடம் புகார் பெற்றுக் கொண்ட போலீசார், அவரது தந்தையை கைது செய்தனர். அதன் பின்னரே நடந்த விஷயம் தாய்க்கும், அக்கம், பக்கத்தினருக்கும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை