உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மகள்கள் பலாத்காரம் தந்தை கைது

 மகள்கள் பலாத்காரம் தந்தை கைது

சித்ரதுர்கா: குடிபோதையில் சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். சித்ரதுர்கா நகரின் கிராமம் ஒன்றில் வசிப்பவர் மஞ்சுநாத், 38. இவர் கல்குவாரி ஒன்றில் பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி, 10 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான மஞ்சுநாத், தவறான நடவடிக்கை கொண்டவர். சமீபத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த இவர், தனியாக இருந்த தன் தாயை, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். தாய் தப்பித்து வெளியே ஓடிவிட்டார். அந்த சம்பவத்துக்கு பின், மகன் மீது வெறுப்படைந்த தாய், வேறு வீடு எடுத்து வசிக்கிறார். சில நாட்களுக்கு முன், குடிபோதையில் மகள்களை வயலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை சிறுமியர் யாரிடமும் கூறவில்லை. இவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த ஆசிரியர், விசாரித்த போது தந்தையின் செயலை கூறினர். ஆசிரியர் உடனடியாக சித்ரதுர்கா போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார், நேற்று கிராமத்துக்கு சென்று, மஞ்சுநாத்தை கைது செய்தனர். கோபமடைந்த கிராமத்தினர், அவரை துாக்கில் போட வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ