மகளுக்கு திருமணம் புரோகிதரை கொன்ற தந்தை கைது
பெலகாவி: பெலகாவி மாவட்டம் சதலகா நகரில் வசிப்பவர் தீபக் அன்னா, 45. இவரது மகள் அனுஜா, 19. இவர், நடப்பாண்டு ஜனவரி 13ல், வேறு ஜாதியை சேர்ந்த, காதலரான ஓம்கார் ஆனந்த் கோத், 24,என்பவரை திருமணம் செய்தார். அனுஜா குடும்பத்தினர் கோபம் அடைந்தனர். தன் மகளுக்கு திருமணம் நடத்திய புரோகிதர் மந்தார் அஜித் ரான்டே, 35, பழிவாங்க, தீபக் அன்னா திட்டம் தீட்டினார். திருமணம் விஷயமாக பேச வேண்டியுள்ளது என, பொய் சொல்லி, சதலகாவின் மானகாபுராவுக்கு வரும்படி அழைத்தார். அங்கு வந்த, புரோகிதரின் கண்களில் மிளகாய் பொடியை துாவிய தீபக் அன்னா, அரிவாளால் வெட்டி கொன்றார். தீபக் அன்னா கைது செய்யப்பட்டார்.