மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் ஆலையில் தீ கட்டடம் இடிந்து விழுந்தது
25-May-2025
தீ விபத்தில் 8 கடைகள் சேதம்
15-May-2025
பெங்களூரு: ஆட்டோ மொபைல் கடையில் தீப்பிடித்ததில், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடினர்.பெங்களூரின் ஜெ.சி.சாலையில் ஆட்டோ மொபைல் கடை உள்ளது. நேற்று அதிகாலை கடையில் எதிர்பாராமல் தீப்பிடித்தது. மளமளவென கடை முழுதும் பரவியது. இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். கடையின் ஷட்டரை பொக்லைன் மூலம் திறந்து, தீயை கட்டுப்படுத்தினர். பக்கத்து கடையின் சுவற்றை உடைத்து, மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். ஐந்தாறு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என, கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின.
25-May-2025
15-May-2025