உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹலசூரு ஹோட்டலில் காஸ் கசிவால் தீ விபத்து

ஹலசூரு ஹோட்டலில் காஸ் கசிவால் தீ விபத்து

ஹலசூரு: ஹலசூரில் ஹோட்டலில் காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. பெங்களூரு ஹலசூரு ரத வீதியில் இந்தியன் வங்கி எதிரில், 'சரண் கபே' என்ற பெயரில் சிறிய ஹோட்டல் உள்ளது. நேற்று காலை 10:30 மணிக்கு ஹோட்டல் சமையல் அறையில் இருந்த, காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு இருந்தது. இதை கவனிக்காமல் சமையல்காரர் அடுப்பை ஆன் செய்ததால், தீ குப்பென பிடித்தது. சமையல்காரரும், ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேரும் வெளியே ஓடினர். ஹோட்டலில் இருந்த கண்ணாடி, மேஜையில் தீப்பிடித்தது. அப்பகுதியினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அந்த வழியாக வந்த, எம்.வி.கார்டனில் வசிக்கும் விக்கி என்ற வாலிபர், ஈர சாக்கை எடுத்து ஹோட்டலுக்குள் சென்று தீயை அணைத்தார். தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதும், ஹோட்டலில் இருந்த நான்கு பேரும் வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை