மேலும் செய்திகள்
ஜூவல்லரி கடையில் மோசடி: பொதுமக்கள் சாலை மறியல்
23-Jan-2026
நெலமங்களா: மா தநாயகனஹள்ளியில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை அடித்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு நெலமங்களா மாதநாயகனஹள்ளியில் உள்ள தாசனபுரா கிராமத்தில், 'ராம்தேவ் ஜூவல்லர்ஸ்' என்ற நகைக்கடை உள்ளது. ஜனவரி, 27ம் தேதி மாலை அங்கு வந்த ஐந்து பேர், 'குழந்தைக்கு காது குத்த வேண்டும். அதற்கான காதணிகளை காண்பியுங்கள்' என்று கூறியுள்ளனர். உடன் நகைக்கடை ஊழியர் காதணிகளை காண்பித்துள்ளார். அப்போது, ஐந்து பேரில் ஒருவர், துப்பாக்கியை காட்டி மிரட்டி, 30 கிராம் தங்க நகைகள், 50,000 ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பினர். தப்பி செல்லும் அவசரத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த மொபைல் போனை விட்டுச் சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாதநாயகனஹள்ளி போலீசார், கொ ள்ளையர்களின் மொபைல் போனை ஆய்வு செய்தனர். இதையடுத்து, ராஜஸ்தானை சேர்ந்த அங்கித், ரவி, அனுாப் சிங், அருண், அனுாப் ராம் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகளையும், ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களில் அங்கித் என்பவர், கடந்த சில ஆண்டுகளாக மாதநாயகனஹள்ளியில் பானிபூரி விற்று வந்துள்ளார். ஆடம்பரமாக வாழ நினைத்த அவர், நகைக்கடையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டார். இதனை தன் நண்பர் ரவிக்கு தெரிவித்துள்ளார். கொள்ளையின் போது, தன்னிடம் உள்ள துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அவரும் கூறி உள்ளார். இதையடுத்தே கைதானவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Jan-2026