மேலும் செய்திகள்
மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
30-Oct-2025
கலபுரகி: கலபுரகி நகரின், அவராதா கிராமத்தின் அருகில், நேற்று முன் தினம் நள்ளிரவு டீசல் டேங்கர் லாரி, அதிவேகமாக சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த பைக் மற்றும் கார் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த நாகேந்திரப்பா மூலகே, 35, சிவகுமார் மூலகே, 27, ஆகியோரும் காரில் பயணம் செய்த நாகேந்திரா சிம்மாஜி, 42, இவரது தாய் சந்திரகலா, 75, ஆகியோரும் உயிரிழந்தனர். நாகேந்திரப்பாவும், சிவகுமாரும் கூலி தொழிலாளர்கள்; உறவினர்கள். மற்றொரு தொழிலாளி உத்தம மைலாரி பாவிகட்டேவுடன், இவர்கள் ஒரே பைக்கில் பணிக்காக கலபுரகிக்கு சென்றிருந்தனர். பணி முடிந்து, கமலாபுராவின், சிரடோனதத்தா கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, விபத்து நடந்துள்ளது. காரில் இருந்த தாயும், மகனும் கலபுரகியில் இருந்து, பீதருக்கு சென்றபோது விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் பைக்கில் இருந்த உத்தம மைலாரி பாவிகட்டேவும், காரில் இருந்த மற்றொரு பெண்ணும் காய மடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த விபத்தால், பீதர் - ஸ்ரீரங்கப்பட்டணா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கலபுரகி போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
30-Oct-2025