உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்., தமிழ் சங்கத்தில் இலவச மருத்துவ முகாம்

 பெங்., தமிழ் சங்கத்தில் இலவச மருத்துவ முகாம்

பெங்களூரு: பெங்களூரு தமிழ் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ முகாம் வரும், 8ம் தேதி நடக்கிறது. பெங்களூரு தமிழ்ச்சங்கம் மற்றும் ஜெரி கேர் மருத்துவமனை இணைந்து வரும், 8ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளன. ஹலசூரு ஏரிக்கரை பகுதியில் உள்ள பெங்., தமிழ்ச்சங்க அலுவலகத்தில் நடக்கும் மருத்துவ முகாமில், 40 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் பங்கேற்கலாம். ரத்த, சிறுநீர், சர்க்கரை, கண் பார்வை போன்றவை பரிசோதனை செய்யப்படுகிறது. பொது உடல்நிலை பரிசோதனையும், உடற்பயிற்சி, பிசியோதெரபி போன்றவையும் இலவசமாக செய்யப்பட உள்ளதாக சங்கம் தெரிவித்து உள்ளது. காலை 10:00 மணி முதல் முகாம் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !