உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண் விவகாரத்தில் தகராறு வாலிபரை கொன்ற நண்பர்

பெண் விவகாரத்தில் தகராறு வாலிபரை கொன்ற நண்பர்

நெலமங்களா: பெண் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற, நண்பரை போலீஸ் தேடுகிறது.பெங்களூரு ரூரல் நெலமங்களா தாலுகா, கொல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தர்ஷன், 24. தன் கிராமத்தின் 22 வயது இளம்பெண்ணை தர்ஷன் காதலித்தார். இருவரும் திருமணம் செய்ய இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற தர்ஷன், வீடு திரும்பவில்லை. நேற்று காலை கிராமத்தின் ஒதுக்குப்புறமாக பகுதியில், ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை யாரோ கத்தியால் குத்திக் கொன்றது தெரிந்தது.நெலமங்களா போலீசார் நடத்திய விசாரணையில், தர்ஷனை அவரது நண்பர் வேணுகோபால், 24, கொலை செய்தது தெரிந்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடிவருகின்றனர்.தர்ஷனின் காதலியும், வேணுகோபாலும் முன்பு காதலித்தனர். கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இதன் பின் அந்த இளம்பெண்ணை, தர்ஷன் காதலித்துள்ளார். தன் முன்னாள் காதலியை காதலிக்க வேண்டாமென, வேணுகோபால் கூறியும் தர்ஷன் கேட்கவில்லை.நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ