கிராமப்புற வளர்ச்சிக்கு ஜி ராம் ஜி திட்டம் உத்வேகம்
பெங்களூரு: ''ஜி ராம் ஜி திட்டம் கிராமப்புற வளர்ச்சிக்கு புதிய உத்வேகம்,'' என, கர்நாடகா அரசு பாராட்டியுள்ளது. தலைமை செயலர் ஷாலினி கூறியதாவது: நமது நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட, 2வது பெரிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. சீரற்ற பருவ மழை, குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தால் கிராமப்புறங்களில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, மாநில அரசு விரிவான திட்டத்தை வகுத்துள்ளது. 'நரேகா' எனும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு, ஜி ராம் ஜி திட்டங்கள் கிராமப்புற வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளன. ஜி ராம் ஜி திட்டத்தை செயல்படுத்த, 5,567 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியது. மாநில அரசு பட்ஜெட்டில் 3,771 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.