க ர்ந ாட க அரசின் கஜானா காலி ம.ஜ.த.,- எம்.எல்.சி., குற்றச்சாட்டு
பெங்களூரு: ''வாக்குறுதி திட்டங்களால், மாநில அரசின் கஜானா காலியாகி விட்டது. இதை மறைக்கவே, மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். கட்டண உயர்வை வாபஸ் பெறவில்லை என்றால் முதல்வரின் வீட்டை முற்றுகையிடுவோம்,'' என ம.ஜ.த., - எம்.எல்.சி., ரமேஷ் கவுடா தெரிவித்தார்.மெட்ரோ ரயில் கட்டண உயர்வை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று ம.ஜ.த.,வினர் போராட்டம் நடத்தினர். இதில், எம்.எல்.சி., ரமேஷ் கவுடா பேசியதாவது:மெட்ரோ ரயில் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு ஏற்கனவே இரண்டு முறை மனு வழங்கி உள்ளோம். ஆனால், மக்களின் கோபம், உணர்வை பொருட்படுத்தாமல், புறக்கணித்துள்ளனர். கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால், முதல்வரின் வீட்டை முற்றுகையிடுவோம்.மாநில அரசின் வாக்குறுதியால் அரசு திவாலாகிவிட்டது. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, கருவூலத்தில் நிதி இல்லை. மாநில அரசு வழங்கிய காசோலைகள் திரும்பி வருகின்றன.அரசின் பொருளாதாரம் எங்கு சென்றுவிட்டது என்பதை நீங்களே காணலாம். இந்த அவமானத்தை தவிர்க்கவும், வருவாயை அதிகரிக்கவும், மக்கள் பாக்கெட்டில் கை வைத்துள்ளனர்.இந்த அரசு வந்ததில் இருந்து 41,360 கோடி ரூபாய்க்கு கூடுதல் வரி விதித்துள்ளது. மின்சாரம், எரிபொருள் என பல வழிகளில் பணம் பறிக்கிறது. நமக்கு நல்லது கிடைக்கும் என்று மாநில மக்கள், காங்கிரசுக்கு அதிகாரத்தை கொடுத்தனர். ஆனால் அரசோ, பல வழிகளில் மக்களிடம் இருந்து கொள்ளை அடித்து வருகிறது.மெட்ரோ ரயில், மின்சாரத்தில் இயங்குகிறது. ஏற்கனவே மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளன. அதிக கட்டணம் காரணமாக, பலர் இதில் பயணிப்பதை தவிர்த்துவிட்டனர். போக்குவரத்தை குறைக்க கொண்டு வரப்பட்டது மெட்ரோ. அதன் உண்மையான நோக்கத்தை அரசு மறந்து விட்டது.இவ்வாறு அவர் பேசினார்.