மேலும் செய்திகள்
97வது முறை திருடி போலீசில் சிக்கியவர்
18-Dec-2025
சிக்கபல்லாபூர்: பிறந்து 20 நாட்களே ஆன, 14 நாய்க்குட்டிகளை நந்தி மலை அருகில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிக்கபல்லாபூரின், நந்தி மலை அருகில் பெங்களூரு - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை வாகனத்தில் வந்த சிலர், வாகனத்தில் கொண்டு வந்த, 14 நாய்க்குட்டிகளை புதரில் வீசி சென்றனர். அந்த வாகனம் மீது, சிக்கபல்லாபூரின் எஸ்.ஜே.சி., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி என, எழுதப்பட்டிருந்தது. இதை கவனித்த வாகன பயணி ஒருவர், விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த அமைப்பினர், நாய்க்குட்டிகளை மீட்டனர். குட்டிகள் 20 நாட்களுக்கு முன் பிறந்தவை. செடிகளின் நடுவில் இவற்றை வீசியுள்ளனர். அமைப்பினர் மிகவும் கஷ்டப்பட்டு, 13 குட்டிகளை மீட்டனர். இதில் ஒரு குட்டியை காணவில்லை. ஒரு குட்டி வாகனம் மோதி அடிப்பட்டு, பலத்த காயம் அடைந்துள்ளது. இதற்கு அமைப்பினர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வரிடம், விலங்குகள் நல அமைப்பினர் கேள்வி எழுப்பிய போது, 'எங்கள் கல்லுாரி வாகனத்தில், நாய்க்குட்டிகளை கொண்டு வந்து வீசியது குறித்து, எனக்கு தெரியாது. நாய்க்குட்டிகளை எங்களிடம் ஒப்படைத்தால், நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என, கூறியுள்ளார்.
18-Dec-2025