மேலும் செய்திகள்
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் கொடியேற்றம்
01-Jun-2025
ராம்நகர் : சம்பள பணத்தை கொடுக்க மறுத்ததுடன், பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்த ஆயத்த ஆடை தொழிற்சாலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.ராம்நகர் ஐசூரை சேர்ந்தவர் 45 வயது பெண். ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தார். அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நசீர், 50, பெண்ணை பார்த்து அடிக்கடி ஆபாச சைகை செய்தார். இதனால் மனம் உடைந்த பெண், 20 நாட்களுக்கு முன், வேலையை விட்டு நின்றார். நேற்று முன்தினம் மாலை தொழிற்சாலைக்கு சென்ற பெண், நசீரை சந்தித்து, 'இனி நான் வேலைக்கு வர மாட்டேன். என் சம்பள பணத்தை கொடுங்கள்' என்று கேட்டார். சம்பளம் கொடுக்க நசீர் மறுத்துள்ளார். கோபம் அடைந்த பெண் திட்டியுள்ளார்.ஆத்திரம் அடைந்த நசீர், அங்கு கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து, பெண்ணை தாக்கி உள்ளார். உயிரை காப்பாற்ற பெண் வெளியே ஓடி வந்தார். அவரை விரட்டிச் சென்ற நசீர், சேலையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்தனர். இதனால் நசீர் தப்பி ஓடிவிட்டார்.பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த ஐசூர் போலீசார், நேற்று காலை நசீரை ராம்நகரில் கைது செய்தனர்.
01-Jun-2025