உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தற்கொலை முயற்சியில் காதலி பலி

 தற்கொலை முயற்சியில் காதலி பலி

ஒயிட்பீல்டு: புதுச்சேரியின் நல்லத்துாரை சேர்ந்தவர் மாணிக்கவேல், 30. புதுச்சேரியின் உலவைக்கல்லை சேர்ந்தவர் ஜனனி, 23. இவர், பெங்களூரின், பட்டந்துார் அக்ரஹாராவில் உள்ள, சொசைட்டி ஜெனரல் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றினார். மாணிக்கவேலு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ஒரே மாநிலத்தை சேர்ந்த இவர்கள், சில ஆண்டுகளாக காதலித்தனர். ஒயிட்பீல்டின் இ.சி.சி., சாலையில் உள்ள, பேயிங் கெஸ்ட் மையம் ஒன்றில் சேர்ந்து வசித்து வந்தனர். நேற்று மதியம் இருவரும், பேயிங் கெஸ்ட் மையத்தின் ஏழாவது மாடிக்கு சென்றனர். அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தனர். பலத்த காயமடைந்த ஜனனி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மாணிக்கவேல் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை