உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பலாக்காய் பிரியாணி!

குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பலாக்காய் பிரியாணி!

– நமது நிருபர் –: சீசன் நேரத்தில் கிடைக்கும் பலாக்காயைப் பயன்படுத்தி, சூப்பரான பிரியாணி செய்யலாம். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். செய்வதும் எளிது.

தேவையான பொருட்கள்

பலாக்காய் – 500 கிராம் பாஸ்மதி அரிசி – 2 கப் வெங்காயம் – 3 தக்காளி – 2 தயிர் – அரை கப் இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் பச்சை மிளகாய் – 3 புதினா – 1 கப் கொத்துமல்லி – ஒரு கைப்பிடி மிளகாய் துாள் – 1 ஸ்பூன் மஞ்சள் துாள் – அரை ஸ்பூன் தனியா பொடி – 1 ஸ்பூன் கரம் மசாலா – 1 ஸ்பூன் பிரியாணி மசாலா – 2 ஸ்பூன் லவங்கம் – 4 பட்டை – 4 துண்டு ஏலக்காய் – 4 பிரியாணி இலை – 2 நெய் – 2 ஸ்பூன் எண்ணெய் – 3 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் பலாக்காயை தோல் நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். உப்பு, சிறிதளவு மஞ்சள் கலந்த நீரில், 10 நிமிடம் வேக வைக்கவும். நீரை வடித்து பலாக்காயை எடுத்து வைக்கவும். அரிசியை, 30 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் மற்றும் எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் பட்டை, லவங்கம் போடவும். பிரியாணி இலையை போடவும். நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். அதன்பின் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போன பின், சிறிதாக நறுக்கிய தக்காளியை போடவும். அதன் பின் மிளகாய் துாள், மஞ்சள் துாள், தனியா பொடி, கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து, தயிரை ஊற்றி நன்றாக கலக்கவும். இதில் ஏற்கனவே வேகவைத்த பலாக்காய் துண்டுகளை போட்டு கிளறி, 10 நிமிடம் மூடி வைக்கவும். மசாலாக்களுடன், பலாக்காய் நன்கு சேர்ந்ததும், அரிசியை போட்டு கிளறவும். இதில் புதினா, கொத்துமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி, மிதமான தீயில், 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேக வைத்தால், சுவையான பலாக்காய் பிரியாணி ரெடி.உப்பு, மஞ்சள் நீரில் பலாக்காயை அதிகம் வேக வைக்க கூடாது. வேக வைத்தால் உதிரியாகி விடும். பாதியளவு வெந்தால் போதும். வெங்காயம், தயிர் பச்சடி தொட்டு சாப்பிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ