உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜி.பி.ஏ., மாநகராட்சி தேர்தல் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

 ஜி.பி.ஏ., மாநகராட்சி தேர்தல் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

பெங்களூரு: ஜி.பி.ஏ.,வின் ஐந்து மாநகராட்சி தேர்தலுக்கு, மூன்று தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் நியமித்து உள்ளார். ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் ஐந்து மாநகராட்சிக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாநில தேர்தல் கமிஷனர் சங்கரேஷி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, ஆட்சேபனை தெரிவிக்க, பிப்., 3ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தார். இதையடுத்து மாநிலத்தின் பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆகிய கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளன. பா.ஜ.,வில் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் தேசிய பொது செயலர் ராம் மாதவ், இணை பொறுப்பாளர்களாக ராஜஸ்தான் மாநில முன்னாள் தலைவர் சதீஷ் பூனியா, மஹாராஷ்டிரா பா.ஜ., - எம்.எல்.ஏ., சஞ்சய் உபாத்யாயா ஆகியோரை நியமித்து பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், நேற்று உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி