உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.1 கோடி மதிப்புள்ள தலைமுடி திருட்டு

ரூ.1 கோடி மதிப்புள்ள தலைமுடி திருட்டு

பெங்களூரு: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த, 1 கோடி ரூபாய் மதிப்புடைய தலை முடியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடரமணா, 73. தலைமுடிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். தலைமுடிகளை சேமித்து வைக்க, லட்சுமிபுரத்தில் சிறிய கிடங்கும் வைத்துள்ளார்.கடந்த மாதம் 28ம் தேதி இரவு கிடங்கின் இரும்புக் கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆறு மர்ம நபர்கள், கிடங்கிற்குள் 27 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த, தலைமுடிகளை திருடி, ஜீப்பில் எடுத்துச் சென்று விட்டனர். வெங்கடரமணா புகாரின்படி, சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.வெங்கடரமணா கூறுகையில், ''வெளிநாடுகளில் நம்ம ஊர் தலைமுடிக்கு அதிக மவுசு உள்ளது. முடியை பயன்படுத்தி, 'விக்' தயாரிக்கின்றனர். ''முதலில், ஹெப்பாலில் தான் கிடங்கு இருந்தது. 20 நாட்களுக்கு முன் தான் இங்கும் கிடங்கு திறந்தேன். கிடங்கிலிருந்து 830 கிலோ எடை கொண்ட, தலை முடிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.''திருடப்பட்ட தலைமுடியின் மதிப்பு வெளிநாட்டு சந்தைகளில் 80 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை இருக்கும். தலைமுடிகளை திருடி சென்றவர்கள் தெலுங்கில் பேசி உள்ளனர். ''இதை பக்கத்து கடையை சேர்ந்த ஒருவர் கவனித்து உள்ளார். அவர்கள் முடியை இங்கிருந்து எடுத்துச் செல்ல வந்தனர் என்று நினைத்துள்ளார். திருட வந்ததாக நினைக்கவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kannan Chandran
மார் 07, 2025 15:22

விடியலார் மாற்று விக்கு வேண்டும் என்று உ.பி-களிடம் கேட்டிருப்பார்.., ஆக, இது அவர்கள் செய்த வேளை..


வாய்மையே வெல்லும்
மார் 07, 2025 10:22

ஓங்கொளில் ஆளு அகப்பட்டால் அவரு இவரே தான்..


Sampath Kumar
மார் 07, 2025 09:43

இதோட முடிக்கு வந்த கிராக்கியை விட்ட அடுத்து நகத்தையும் கொள்ளையடிப்பார்கள் போல


Kasimani Baskaran
மார் 07, 2025 07:15

எடுத்துச்செல்ல / திருட மொத்தம் ஆறு வித்தியாசம்தான் உண்டு... ஹிஹிஹி


Raj
மார் 07, 2025 06:55

தங்கம், வெள்ளி எல்லாம் போய் இப்போ கடைசியா மயிரையும் திருட ஆரம்பிச்சிட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை