உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் அறவிப்பு

அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் அறவிப்பு

பெங்களூரு: பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் அறிகுறிகள் தென்படுகிறது. மலைப்பகுதி மற்றும் தட்சிண கன்னட மாவட்டங்களில், 'சிவப்பு அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் அறிகுறி தென்படுகிறது. பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல் மாவட்டங்களில் வரும் ஐந்து நாட்களில் மழை பெய்யக்கூடும். இம்மாவட்டங்களில் 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் நாளை (இன்று) சாதாரண மழை பெய்யும். செப்டம்பர் 2 மற்றும் 3ல் கன மழை பெய்யும். செப்டம்பர் 5ம் தேதி வரை, கடலோர மாவட்டங் களில், கன மழைக்கு வாய்ப்புள்ளதால், 'சிவப்பு அலெர்ட்' அறிவிக்கப் பட்டுள்ளது. மலைப்பகுதி மாவட்டங்கள், வடக்கு உட்பகுதிகளில் அடுத்த மூன்று நாட்கள், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெங்களூரில் இன்றும் (நேற்று) கோரமங்களா, கார்ப்பரேஷன் சதுக்கம், சாந்தி நகர், சிவாஜி நகர் உட்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது. பெங்களூரில் அடுத்த 48 மணி நேரம், மேகமூட்டமான வானிலை நிலவும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை