உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கவுரவ டாக்டர் பட்டம் விருப்பமில்லாத பொம்மை

 கவுரவ டாக்டர் பட்டம் விருப்பமில்லாத பொம்மை

பெங்களூரு: 'கவுரவ டாக்டர் பட்டம் பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை' என பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து, அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்த, ஹாவேரி பல்கலையின் வேந்தர், துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இருப்பினும், எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வாங்குவதில் விருப்பம் கிடையாது. இதுபற்றி, நான் ஏற்கனவே வேந்தரிடம் கூறிவிட்டேன். நான் மக்கள் சேவையில் இருக்கிறேன். எந்த ஒரு பட்டம், பதக்கம், விருது எதையும் எதிர்பார்த்து நான் மக்கள் சேவைக்கு வரவில்லை. மக்கள் என் மீது காட்டும் அன்பு, பாசத்தை பெரிய விருதாக கருதுகிறேன். எந்த ஒரு துறையிலும் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கே கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு பட்டம் வழங்குவது ஏற்புடையதல்ல. இதுவே என்னுடைய கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை