ஜூலையில் மருத்துவமனை திறப்பு
ஜூலையில் மருத்துவமனை திறப்புபெங்களூரின் இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்ட, 2019ல் 100 கோடி ரூபாயை மாநில அரசு வழங்கியது. கொரோனா பரவலால் பணிகள் தாமதமாகின. தற்போது எட்டு மாடிகள் கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. ஜூலை இறுதியில் புதிய மருத்துவமனை திறக்கப்படும். புதிய கட்டடம் கட்டப்பட்டதால், மருத்துவமனையின் படுக்கைகள் எண்ணிக்கை 900 ஆக அதிகரிக்கும். தேவையான மருத்துவ உபகரணங்கள் பொருத்த, ஊழியர்களை நியமிக்க அனுமதி கேட்டு, அரசிடம் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், ஊழியர்கள் நியமிக்கப்படுவர். வரும் நாட்களில் இங்கு ரோபோடிக் சேவை கிடைக்கும்.சஞ்சய், நிர்வாக இயக்குநர்,இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை.