ஸ்ட்ராபெர்ரி பழத்தில் மில்க் ஷேக் செய்வது எப்படி?
– நமது நிருபர் –: வீட்டிலேயே எளிய முறையில் சுவையான ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்து அசத்தலாம். இதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது. சில நிமிடங்களிலேயே செய்து முடிக்கலாம். தேவையான பொருட்கள்
ஸ்ட்ராபெர்ரி பழம் – 15 குளிர்ந்த பால் – 250 மி.லி., சர்க்கரை – தேவையான அளவு ஐஸ்கிரீம் –100 கிராம் செய்முறை
முதலில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை பாத்திரத்தில் போட்டு, நன்கு கழுவ வேண்டும். பழங்களின் மேல் பகுதியிலுள்ள இலைகளை நீக்கவும். பின், பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இதையடுத்து, மிக்சியில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி, குளிர்ந்த பால், சர்க்கரை, வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்க்க வேண்டும். இதை மென்மையாக, நுரை வரும்படி அரைக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் தயார். இதை, டம்ளரில் ஊற்றி, அதன் மீது நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்களை அலங்கரித்து பரிமாறலாம். இதன் சுவை அற்புதமாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.