உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மனைவியை ஹெல்மெட்டால் அடித்து கொன்ற கணவன்

 மனைவியை ஹெல்மெட்டால் அடித்து கொன்ற கணவன்

தார்வாட்: மனைவியை இரு சக்கர வாகன ஹெல்மெட்டால் அடித்து கொன்ற கணவரை போலீசார் தேடுகின்றனர். தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் கணேஷ்நகரை சேர்ந்த சிவராஜ் ஹலேமானி, 28, என்பவருக்கும், நாகரத்னா, 19, என்பவருக்கும், நான்கரை மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நாகரத்னா, கோபித்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். சில நாட்களுக்கு பின், மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்து விடுவது அவருக்கு வழக்கம். வழக்கம் போல, சில நாட்களுக்கு முன் கணவரிடம் கோபித்து, தாய் வீட்டுக்கு சென்ற நாகரத்னா, நேற்று காலை மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த சிவராஜ், தன் இரு சக்கர வாகன ஹெல்மெட்டால், நாகரத்னாவின் தலையில் பலமாக தாக்கினார். படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சிவராஜ், அங்கிருந்து தப்பியோடி விட்டார். தகவல் அறிந்த போலீசார், தலைமறைவாக உள்ள சிவராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
ஜூலை 15, 2026 12:44

உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா ? ஒரு பெண்ணை காப்பாற்றி வாழ துப்பு இல்ல . சண்டை சச்சரவு அடிச்சு துன்புறுத்துவது அசிங்கத்தின் உச்சம் .. அப்பப்ப .. என்ன கொடும சரவணா இதெல்லாம் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை