மேலும் செய்திகள்
கள்ளத்தொடர்பு மனைவி கொலை செய்த கணவர் கைது
03-Oct-2025
சாம்ராஜ்நகர்: பைக்கில் சென்றபோது, தம்பதிக்கிடையே சண்டை ஏற்பட்டதால், கோபமடைந்த கணவர் ஆற்றில் குதித்தார். சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவின், தாசனபுரா கிராமத்தில் வசிப்பவர் மஞ்சுநாத், 34. இவரது மனைவி ராஜேஸ்வரி, 28. இவர்கள் நேற்று மாலை, கிராமத்தின் அருகில் உள்ள ஆற்றின் பாலம் மீது பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொறுமையிழந்த மஞ்சுநாத், பைக்கை நிறுத்தி, “நான் செத்தால் தான், உனக்கு புத்தி வரும்,” என, கூறிக்கொண்டே, ஆற்றில் குதித்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, கணவரை காப்பாற்றும்படி அலறினார். போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், ஆற்றில் மஞ்சுநாத்தை தேடி வருகின்றனர்.
03-Oct-2025