உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தடம்புரண்ட மெட்ரோ ரயில் தாமதமாக வெளியான தகவல்

 தடம்புரண்ட மெட்ரோ ரயில் தாமதமாக வெளியான தகவல்

பெங்களூரு: பணிமனையில் இருந்து ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, மெட்ரோ ரயில் தடம் புரண்டது. பெங்களூரு ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே, டிரைவர் இல்லாத ஏழு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களை பராமரிக்கும் பணிமனை ஹெப்பகோடியில் உள்ளது. கடந்த மாதம், 15ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு, பணிமனையில் இருந்து பொம்மசந்திரா ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் தடம் புரண்டது. மீட்பு வாகனம் மூலம் தடம் புரண்ட ரயில் துாக்கப்பட்டு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனாலும், ரயில் தடம் புரண்டது குறித்து விசாரிக்க, ஆறு பேரை உள்ளடக்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ரயில் தடம் புரண்டது தொடர்பான, புகைப்படம் நேற்று வெளியானது. பயணியர் இருக்கும் போது, ரயில் தடம் புரண்டு இருந்தால், பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும் என, பயணியர் ஆதங்கம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை