உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குமாரசாமி ஏமாற்றியது போதும் இக்பால் ஹுசைன் பாய்ச்சல்

குமாரசாமி ஏமாற்றியது போதும் இக்பால் ஹுசைன் பாய்ச்சல்

ராம்நகர் : “ராம்நகர் மக்களை இதுவரை நீங்கள் ஏமாற்றியது போதும்,” என, மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமியை, ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் சாடி உள்ளார்.ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதியை பெற்றுக் கொடுத்தால், ஐந்து நிமிடத்தில் பிரதமரின் அனுமதி வாங்கித் தருவேன் என்று மாநில காங்கிரஸ் அரசுக்கு, மத்திய அமைச்சர் குமாரசாமி சவால் விடுகிறார். தமிழகத்திடம் இருந்து நாங்கள் அனுமதி பெற்றால், மத்திய அரசிடம் அனுமதி பெற எங்களுக்கு நீங்கள் தேவையா?குமாரசாமி, அவர் வேலையை பார்க்கட்டும். ராம்நகர் மக்கள் தேவகவுடா குடும்பத்திற்கு அரசியல் வாழ்க்கை கொடுத்தனர். இந்த மாவட்ட மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றியது போதும். மேகதாது விஷயத்தில் அரசியல் செய்யாமல், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும் என்று நான் கூறிய கருத்தில் உறுதியாக உள்ளேன். அவர் முதல்வர் ஆவதற்கு என்னென்ன தகுதிகள் உள்ளன என்றும் கூறி இருக்கிறேன். இனி முடிவு எடுக்க வேண்டியது கட்சி மேலிடம்.முயற்சி பலன் அளிக்காமல் போகலாம். பிரார்த்தனை பலன் அளிக்கும் என்று சிவகுமாரே கூறி உள்ளார். அவரது பிரார்த்தனை நிச்சயம் பலன் அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை