உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ராணுவ தேர்வில் முறைகேடு: 18 தேர்வர்களிடம் விசாரணை

 ராணுவ தேர்வில் முறைகேடு: 18 தேர்வர்களிடம் விசாரணை

ஹலசூரு: மின்னணு சாதனங்களை பயன்படுத்தி, ராணுவ தேர்வு எழுதி முறைகேடு செய்த, 18 தேர்வர்களிடம் விசாரணை நடக்கிறது. பெங்களூரு ஹலசூரில் உள்ள 515 ராணுவ தள பட்டறையின் டிவிஷன் கிளார்க் பதவிகளுக்கு ஆள்சேர்ப்புக்காக, நேற்று முன்தினம் எழுத்து தேர்வு நடந்தது. ராணுவ தள பட்டறையில் உள்ள மையத்தில் நடந்த, இந்த தேர்வில் பங்கேற்ற சில தேர்வர்கள், மின்னணு சாதனங்களை பயன்படுத்தி தேர்வு எழுதுவதாக, கமாண்டன்ட் பாதுகாப்பு அதிகாரி ஜோதிர்லிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் அதிகாரிகள் தேர்வு அறைக்கு வெளியே சோதனை நடத்திய போது, தேர்வர்கள் இருவரின் பைகளில் இருந்து புளூடூத் கண்டெடுக்கப்பட்டது. தேர்வர்கள் சிலர் முறைகேடு செய்து, தேர்வு எழுதியதும் தெரிந்தது. ஜோதிர்லிங்கம் அளித்த புகாரில், ஹலசூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேர்வர்கள் 18 பேரிடம் விசாரணை நடக்கிறது. கர்நாடகாவில் கடந்த 2022 ல் 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு நடந்த தேர்விலும், தேர்வர்கள் பலர் புளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதி வெற்றி பெற்றதும், இந்த வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., அம்ருத் பால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை